சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல தொடர் வாய்ப்புகளை மிஸ் செய்த சீரியல் நடிகர்- யார் தெரியுமா?
சீரியல்கள்
விஜய் டிவியில் ரசிகர்களை கவரும் வண்ணம் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ஆஹா கல்யாணம் போன்ற சீரியல்கள் எல்லாம் நல்ல டிஆர்பி பெற்று வருகிறது.
தற்போது சில புதிய தொடர்களும் விஜய் தொலைக்காட்சியில் களமிறங்க உள்ளது.
அண்மையில் சின்ன மருமகள், நீ நான் காதல் போன்ற தொடர்கள் எல்லாம் புதியதாக ஒளிபரப்பப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மிஸ் செய்த நடிகர்
தற்போது பிரபல நடிகர் ஒருவர் 5க்கும் மேற்பட்ட சீரியல்கள் வாய்ப்பை மிஸ் செய்த செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
அவர் வேறுயாரும் இல்லை கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே தொடர் மூலம் பிரபலமான நவீன் தான் அவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் (கதிர்), சிறகடிக்க ஆசை, சக்திவேல், தங்கமகள் மற்றும் இதயம் போன்ற தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் மிஸ் செய்துள்ளார்.
வித்தியாசமான மற்றும் கிராமத்து கதைக்களம் கொண்ட சீரியலுக்காக காத்திருந்த அவர் தற்போது சின்ன மருமகள் என்ற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.