டாப் நடிகர்கள் சம்பளம்.. தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக பொதுக்குழுவில் தீர்மானம்
தற்போது முன்னணி நடிகர்களில் சம்பளம் என்பது உச்சத்தில் தான் இருக்கிறது. ஒரு படத்திற்கு 150 - 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இதற்காக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

வியாபார பங்கீட்டு முறை..
தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது. அதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
முன்னணி நடிகர்கள் வியாபார பங்கிட்டு முறை (Profit sharing) முறையில் மட்டுமே படம் நடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
முன்னணி நடிகர்கள் வியாபார பங்கிட்டு முறை (Profit sharing) முறையில் மட்டுமே படம் நடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இது நடந்தால் படம் தோல்வி அடையும் பட்சத்தில் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் என்பது வராமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.