பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நான்கு முன்னணி நடிகர்கள்.. அதுவும் ஒரே கதாபாத்திரத்தில்
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, லால், சரத்குமார், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்கள்.
கடந்த 6ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பொன்னியின் செல்வன் முதல் பாத்தின் ட்ரைலரும் வெளிவந்தது. பிரமாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை மெய்சிலிருக்க வைத்திருந்தார் மணிரத்னம்.
வாய்ப்பை தவறவிட்ட நடிகர்கள்
இந்நிலையில், இப்படத்தில் கார்த்தி ஏற்று நடித்துள்ளார் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் இதுவரை நான்கு நடிகர்கள் நடிப்பதாக இருந்து அதன்பின் வெவ்வேறு காரணங்களால் நடிக்காமல் போய்விட்டது.
இதுவரை எம்.ஜி.ஆர், கமல் ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் என இதுவரை இந்த நான்கு நடிகர்களிடம் இருந்து வாய்ப்பு நழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.