தொடர்ந்து படுதோல்வியை சந்திக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள்.. தமிழ் சினிமாவின் நிலை இதுதானா
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
அதே போல் சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் அஜித்தின் வலிமை இரு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை மட்டுமே பெற்றது.
படுதோல்வியை சந்திக்கும் படங்கள்
அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த நான்கு படங்களும், கேரளாவில் மாபெரும் படுதோல்வியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா பாக்ஸ் ஆபிஸ்
கேரளா பாக்ஸ் ஆபிசில் அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், வலிமை மற்றும் பீஸ்ட் ஆகிய நான்கு படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் தெரிவிக்கிப்படுகிறது.
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri