பிரபாஸ் நடித்துள்ள ராஜா சாப் படத்தை நிராகரித்த இரண்டு முன்னணி நடிகர்கள்..
ராஜா சாப்
இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் ராஜா சாப். ஹாரர் பேண்டஸி கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் ஆகிய மூன்று நடிகைகள் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதனால் வசூலில் அடி வாங்கி பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்துள்ளது.
நிராகரித்த முன்னணி நடிகர்கள்
இந்த நிலையில், இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த பிரபாஸ் கிடையாது. முதலில் இப்படத்தின் கதையை நடிகர் நாணியிடம் இயக்குநர் மாருதி கூறியுள்ளார். ஆனால், இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார் நாணி.
[X7UHLP ]
அதன்பின் நடிகர் சூர்யாவிடம் இந்த கதையை கூற முயற்சி செய்துள்ளார். ஆனால், அதுவும் நடக்கவில்லை. அதன்பின்தான் இந்த கதையை பிரபாஸிடம் கூறி ஓகே செய்துள்ளார் இயக்குநர் மாருதி.
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri