ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள டாப் நடிகர்கள்.. யாரெல்லாம் பாருங்க
டாப் நடிகர்கள்
சினிமாவில் நடிக்க களமிறங்கும் ஒவ்வொருவரும் கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார்கள்.
நாயகர்களின் சம்பளங்கள் இப்போது ரூ. 300 கோடிக்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. சினிமாவில் வெற்றி நாயகர்களாக வலம் வரும் பலர் இப்போது தங்களது சொந்த தொழிலிலும் கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார்கள்.
அப்படி நாம் இப்போது சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து சம்பாதிக்கும் பிரபலங்களின் விவரத்தை காண்போம்.
சூர்யா
சென்னையில் நிறைய கமர்ஷியல் இடங்களில் முதலீடு செய்திருக்கிறார், மும்பையில் குடியேறிய சூர்யா அங்கு சொந்தமாக பிளாட் ஒன்றையும் வாங்கி இருக்கிறார்.
தனுஷ்
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள இவர் குறிப்பாக சென்னையின் பிரைம் லொக்கேஷன்களில் அதிக முதலீடு செய்திருக்கிறாராம்.
அஜித்
சினிமாவை தாண்டி இப்போது கார் ரேஸில் கவனம் செலுத்திவரும் அஜித் சுற்றுலாத் தளங்களில் நிறைய முதலீடு செய்திருக்கிறாராம், வெளிநாடுகளில் சொத்துக்கள் உள்ளனவாம்.
விஜய்
இப்போது அரசியலில் ஈடுபாடு காட்டியுள்ள விஜய் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் முதலீடு செய்திருக்கிறாராம். இவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்த தொகை மட்டும் ரூ. 500 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.
ரஜினி
சினிமாவை போல ரியல் எஸ்டேட் தொழிலிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வருவதாக கூறப்படுகிறது. இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் கமர்ஷியல் இடங்கள் மட்டுமின்றி பண்ணை வீடு, விவசாய நிலம் என நிறைய இடங்களில் முதலீடு செய்திருக்கிறாராம்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
