சங்கர், ராம் சரண் படத்தில் வில்லியாக நடிக்கும் முன்னணி நடிகர்.. அட, இவரா
பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படத்தில் நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
மேலும் சமீபத்தில், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அதனை தொடர்ந்து ஒரு சுவாரஸ்யமான தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது, இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில், முன்னணி நடிகையான தமன்னா நடிக்கவிருக்கிறார் என்று தகவல் கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.