விஜய்யின் 68வது படத்தில் இணைந்த மாஸ் நாயகி- செம தூள்
விஜய்யின் 68
விஜய்யின் லியோ படத்தை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளார்கள். படமும் லாபத்தை கொடுத்து பல கோடியும் வசூல் சாதனை செய்தது.
இப்போது விஜய் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிக்க இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

கவுண்டமணி-செந்தில் காமெடி காட்சியில் வந்த அழகுமணியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
தற்போது பிரேக் விடப்பட்டுள்ள நிலையில் ஐனவரி முதல் வாரம் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என தகவல்கள் வருகின்றன.
சென்னை, தாய்லாந்து, துருக்கி, ஹைதராபாத் என பல இடங்களில் படப்பிடிப்பு நடக்க ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
பிரபல நடிகை
அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கும் இப்படத்தில் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், யோகி பாபு, கிச்சா சுதீப், மீனாட்சி சௌத்ரி, இவானா, க்ருத்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளாராம். இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
