பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை- அவரே கூறிய காரணம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
5 வருடங்களுக்கும் மேலாக அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஒளிபரப்பான தொடர் முடிந்துவிட்டது.
ஆனால் அதே தொடர் பெயரில் முதல் பாகத்தில் நடித்த சிலரும், புதிய நடிகர்கள் பலரும் நடிக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த 2ம் பாகம் தந்தை, மகன்களை சுற்றிய கதையாக அமைந்துள்ளது.
தற்போது கதையில் சரவணனின் திருமணம் நிகழ்வு நடந்து வருகிறது.
விலகிய நாயகி
இந்த தொடரில் ராஜியின் சித்தியாக ரிஹானா நடித்து வந்தார். ஆனால் திடீரென சில காரணங்களால் அவர் வெளியேற அவருக்கு பதிலாக தற்போது நடிகை மாதவி நடித்து வருகிறார்.
சீரியலில் விலகியது குறித்து ரிஹானா கூறுகையில், எனது தனிப்பட்ட காரணங்களால் தான் தொடரில் இருந்து விலகினேன்.
கதைப்படி இந்த சீரியல் கேரக்டர் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதால் என்னால் பிரேக் எடுக்க முடியவில்லை. இதனால் தான் நான் சீரியலில் இருந்து விலக வேண்டியதாக ஆனது என கூறியுள்ளார்.
You May Like This Video

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
