பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு திடீரென விலகும் யாரும் எதிர்ப்பார்க்காத முக்கிய நடிகை- ரசிகர்கள் வருத்தம்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் 4 வருடங்களுக்கு மேலாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் இதுவரை 1,200 எபிசோடுகளை எட்டியுள்ளது.
டாப் சீரியல்கள் விஜய் டிவி லிஸ்டில் எடுத்தால் அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வந்துவிடும், அந்த அளவிற்கு அழகான சீரியலாக மக்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த தொடர் கடந்த சில வாரங்களாக முடிவுக்கு வரப்போகிறது என்று கூறப்பட்டு வருகிறது, ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை.
கதை என்னவோ பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேருவது போல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திடீரென விலகிய நடிகை
இந்த நேரத்தில் தான் சீரியல் குறித்து ஒரு முக்கிய தகவல் வந்துள்ளது. அதாவது தனம், மீனா, முல்லை, ஐஸ்வர்யாவை விட அதிக ரசிகர்களை கொண்ட குழந்தை நட்சத்திரம் கயல் பாப்பா தான் தொடரை விட்டு விலக இருக்கிறாராம்.
கயலின் உண்மையான பெயர் ஹாசினியாம், சீரியலில் மிகவும் கியூட்டாக நடித்த ஒரு குழந்தை. கயலின் அம்மா ஒரு பேட்டியில், ஹாசினி தொடரில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது, அவருக்கு பதில் அவரது அக்காவை நடிக்க கேட்டுள்ளார்கள்.
நாங்களும் சரி என்று கூறியிருக்கிறோம், கயலின் அக்காவும் நடிப்பதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறார் என தெரிவித்திருக்கிறார். கியூட்டான கயல் பாப்பா சீரியலில் வர மாட்டாரா என்பதை கேள்விப்பட்ட ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமாக தான் உள்ளார்கள்.
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் தாமரை- எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?