சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து திடீரென வெளியேறியுள்ள பிரபல நடிகை.. ரசிகர்கள் ஷாக்
சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டிஆர்பியில் டாப் இடத்தில் இருக்கும் ஒரு தொடர்.
சாதாரணமாக எந்த ஒரு சன் டிவி சீரியலிலும் கதையின் முக்கிய நடிகர்களின் திருமணம் அவ்வளவு ஈஸியாக முடியாது. ஆனால் இந்த சீரியலில் அன்பு-ஆனந்தி திருமண ஏற்பாடு தொடங்கிய வேகத்தில் முடிந்த அடுத்தக்கட்ட பிரச்சனையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அன்புயை எப்படியாவது அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என ஆனந்தி என்னென்னவோ செய்தார்.
அன்புவின் அம்மாவோ கடைசிவரை ஆனந்தியை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார், இன்னொரு பக்கம் ஆனந்தியே இந்த திருமணம் குறித்த மாறுபட்ட கட்டத்தில் தான் உள்ளார்.
மாற்றம்
தொடரில் ஆனந்தியின் தோழியாக நடித்து வந்தவர் தான் ஜெயந்தி. இவரது திருமண ஏற்பாடு போல தான் ஆனந்தியை நம்ப வைத்து அவரது திருமணமும் நடந்தது.
ஜெயந்தி கதாபாத்திரத்தில் தரணி ஹெப்சிபா தான் நடித்து வந்தார், ஆனால் அவர் திடீரென தொடரில் இருந்து வெளியேறிவிட்டார், அவருக்கு பதில் வேறொரு நடிகை கமிட்டாகியுள்ளார்.
ரசிகர்களோ பழைய ஜெயந்தி தான் பெஸ்ட் என்பது போல் கமெண்ட் செய்து வருகின்றனர்.