மாற்றுத்திறனாளிக்காக Santa Claus ஆக மாறிய பிரபல நடிகை- யார் பாருங்க

Yathrika
in பிரபலங்கள்Report this article
கிறிஸ்துமஸ் தாத்தா
கிறிஸ்துமஸ் பண்டிகை வந்ததும் முதலில் நமக்கு நியாபகம் வருவது பிரியாணி தான், அதன்பிறகு பள்ளி குழந்தைகள் என்றால் ஜிங்கிங் பெல் பாடல் தெரிந்திருக்கும் பாடுவார்கள்.
மேலும் Santa Clausஐ நினைப்பார்கள், இந்த தாத்தா நமக்கு பரிசு தருவார் என நம்பும் குழந்தைகள் பலர் உள்ளார்கள். அப்படி தற்போது ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைக்காக Santa Clausஆக மாறியுள்ளார் பிரபல நடிகை.
யார் இவர்
இப்படி Santa Clausஆக மாறியிருப்பது வேறுயாரும் இல்லை நடிகை ரோஜா தான். செருப்பு தைக்கும் தொழிலாளியான நாகராஜுக்கு , மேரி என்கிற மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மேரிக்கு சமீபத்தில் ஒரு சிறுநீரகம் செயலிழந்து தற்போது உடல்நிலை முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார்.
இரண்டு சின்னசிறு பிள்ளைகளை வைத்து கொண்டு அவர்களை படிக்க வைக்க முடியாமலும், மனைவியின் மருத்துவ செலவுக்கும் நாகராஜ் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த நடிகை ரோஜா நாகராஜின் நிலையை அறிந்து அவர்கள் வீட்டிற்கு Santa Claus ஆக சென்று கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார். அதோடு ரூ. 2 லட்சம் காசோலையையும் வழங்கியுள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
