சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகை யார் என்று தெரிகிறதா?- அவரே தான்
பிரபல நடிகை
பிரபலங்களில் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவது வழக்கம்.
அப்படி இன்றும் ஒரு நடிகையின் குழந்தை பருவ போட்டோ தான் வெளியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
தமிழில் சில படங்களே நடித்துள்ள இவர் மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்துள்ளார். சினிமா பயணத்தின் போது ஒரு பெரிய பிரச்சனையிலும் சிக்கியிருந்தார்.
யார் இவர்
37 வயதாகும் நடிகை பாவனா இப்போதும் இன்ஸ்டாவில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தனது அழகில் கட்டிப்போட்டு வருகிறார்.
2002ம் ஆண்டு வெளியான நம்மல் என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் பாவனா.
முதல் படமே அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்க தமிழ் பக்கம் வந்தவர் அறிமுகம் ஆன படம் சித்திரம் பேசுதடி. இப்படத்தை தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, வாழ்த்துகள், ஜெயம்கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
கடைசியாக தமிழில் அவர் நடித்த படம் அவன், அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவர் கடந்த 2018ம் ஆண்டு கன்னட பட தயாரிப்பாளராக நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவரது சிறுவயது புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.