அல்லு அர்ஜுடன் இணையும் இரண்டு முன்னணி நடிகைகள்.. லேட்டஸ்ட் அப்டேட்
அல்லு அர்ஜுன்
புஷ்பா படத்தின் மூலம் மாபெரும் வசூல் வேட்டையாடிய நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 22வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க தீபிகா படுகோன் முக்கிய தோற்றத்தில் நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தனது 23வது திரைப்படத்தின் அறிவிப்பை சமீபத்தில் அல்லு அர்ஜுன் வெளியிட்டார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார். DC திரைப்படத்தில் நடித்து முடித்த கையோடு A23 படத்தை லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இரண்டு முன்னணி நடிகைகள்
இந்த நிலையில், அல்லு அர்ஜுனுடன் இணைந்து இப்படத்தில் நடிக்கப்போகும் இரண்டு முன்னணி நடிகைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் ஏற்கனவே அல்லு அர்ஜுனுடன் இணைந்து அலா வைகுந்தபுரமுலோ படத்தில் நடித்திருந்தார்.

மற்றொருவர் நடிகை ருக்மிணி வசந்த். சென்சேஷனல் தென்னிந்திய நடிகையாக வலம் வரும் ருக்மிணி வசந்த் கடைசியாக காந்தாரா எனும் மாபெரும் வெற்றிப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
