சென்னையில் அதிகம் வசூலித்த டாப் படங்கள், வலிமை, பீஸ்ட்டை முந்தியதா விக்ரம்?
தமிழ் சினிமா நடிகர்களின் படங்கள் வசூலில் செம கலெக்ஷனை பெற்று வருகின்றன. ரஜினி படங்கள் மட்டுமே அதிக வசூல் சாதனை செய்துவந்த நிலையில் இப்போது எல்லா முன்னணி நடிகர்களின் படங்களும் செம கலெக்ஷன் பெறுகின்றன.
அப்படி இந்த வருடம் மட்டும் அஜித், விஜய், சூர்யா என பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. தற்போது சில வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகியுள்ளது.
நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனை திரையில் பார்ப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.

சென்னை வசூல் படங்கள்
சென்னையில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் முதல் நாளில் ரூ. 1.71 கோடி வரை வசூலித்துள்ளதாம். இந்த வசூலால் கொரோனாவிற்கு பிறகு சென்னையில் முதல் நாளில் அதிகம் வசூலித்த படங்களில் 3வது இடத்தை பிடித்துள்ளது விக்ரம்.
முதல் 3 இடத்தில் இருக்கும் படங்களின் விவரம்
- பீஸ்ட்- ரூ. 1.96 கோடி
- வலிமை- ரூ. 1.82 கோடி
- விக்ரம்- ரூ. 1.71 கோடி
- ரஜினியின் அண்ணாத்த திரைப்படமும் முதல் நாள் சென்னையில் ரூ. 1.71 கோடி தான் வசூலித்துள்ளது.
கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்த்த ஷாலினி அஜித் மற்றும் அனோஷ்கா- வெளிவந்த புகைப்படங்கள்