இலக்கியா சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்- ரசிகர்கள் ஷாக்
சீரியல்
சன் தொலைக்காட்சியில் எத்தனையோ ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. எல்லா சீரியல்களுக்குமே ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, எதிர்நீச்சல் போன்ற தொடர்கள் தான் TRPயில் டாப்பில் இருக்கிறது.
அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்தது.
ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை, TRP குறைந்து இருப்பதால் தொடரை முடிவுக்கு கொண்டு வர தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய சீரியல்
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு முக்கிய தொடர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் இலக்கியா தொடரில் இருந்து ஹீமா பிந்து வெளியேறி இருக்கிறாராம்.
அவர் திடீரென வெளியேறிய தகவல் வர ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.