ரஜினி, விஜய், தோனி என பல பிரபலங்களின் Blue Tick போனது- டுவிட்டர் அதிரடி, இவர்களுக்கும் போனதா?
டுவிட்டர்
டுவிட்டரை Elon Musk வாங்கியதில் இருந்து அதில் நிறைய மாற்றங்களை அவர் கொண்டு வருகிறார். Blue Tick வைப்பதில் கூட நிறைய மாற்றங்கள் வரப்போகிறது என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
தங்களது நிஜ பெயரில் இருந்து பட புரொமோஷக்காக பிரபலங்கள் பெயரை மாற்றுவது வழக்கம். அப்படி சமீபத்தில் பொன்னியில் செல்வன் படத்தில் நடித்த த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி தங்களது பெயரை மாற்ற Blue Tick பறிபோனது.

மற்ற பிரபலங்கள்
அவர்களாவது பெயரை மாற்றினார்கள், தற்போது மேலும் சில பிரபலங்களின் Blue Tick போனது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், விஜய், கிரிக்கெட் வீரர்கள் தோனி, விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்ட பிரபலங்களின் Blue Tick நீக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் சந்தா செலுத்தாத நிலையில் பெரும்பாலான பிரபலங்களின் கணக்குகளில் இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

முந்தானை முடிச்சு படத்தில் கிளாமராக நடித்த டீச்சரா இது?- பேரன் குழந்தைகளுடன் அவரின் குடும்ப போட்டோ
டிரம்பின் அழைப்புகளை புறக்கணித்த கிம் ஜாங் உன் - அணு ஆயுத களஞ்சியத்தை வேகமாக அதிகரிக்கும் வடகொரியா News Lankasri
ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் - பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri