டாப் நடிகர்களாக கலக்கிவரும் சிறுவயதில் இருக்கும் இந்த பிரபலங்கள் யார் என்று தெரிகிறதா?- அட இவங்கதானா?
சிறுவயது போட்டோ
சமூக வலைதளங்களில் சில வருடங்களாக பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகிறது.
அதிலும் இதுவரை தமிழ் சினிமாவில் டாப்பில் கலக்கிய நடிகர்களின் புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது, நாமும் அந்த புகைப்படங்களை அன்றாடம் பதிவிட்டு பிரபலம் யார் என்பதை கூறி வருகிறோம்.
இன்று இரு பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் தான் வெளியாகியுள்ளது, அவர்கள் இருவரும் தமிழில் இல்லை தெலுங்கு சினிமாவில் டாப் நாயகர்களாக உள்ளனர். ஏன் இவர்களது அப்பா, அவரது அப்பா என பெரிய சினிமா குடும்பம்.
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவர்களது படங்கள் சில தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது, சில நேரடி படங்களும் நடித்துள்ளார்கள்.

யார் இவர்கள்
சில விவரங்களை படித்ததுமே யார் இவர்கள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்.
சினிமா குடும்பமான இவர்கள் அக்கினேனி குடும்பத்தினர், இந்த சிறுவயது போட்டோவில் இருப்பது நாக சைத்தன்யா மற்றும் அகில் நாகர்ஜுனா தான்.
இதோ அவர்களது குடும்பம் மொத்தமாக எடுத்த அழகிய போட்டோ,
