டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இவர்கள் தான்.. வீடியோ இதோ
டாப் குக்கு டூப் குக்கு
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சி தான் டாப் குக்கு டூப் குக்கு. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய செப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார்.

சமீபத்தில் ப்ரோமோ வெளிவந்ததில் இருந்து, இந்த நிகழ்ச்சியின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிலாக இருந்த மோனிஷா, ஜி.பி. முத்து. அதிர்ச்சி அருண், பரத் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளனர்.

வைகை புயல் வடிவேலுவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ப இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. இந்த நிலையில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.

போட்டியாளர்கள்
அதன்படி, டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் நடிகை சோனியா அகர்வால், நடிகர் சிங்கம் புலி, நடிகை சுஜாதா சிவகுமார், நடிகை ஐஸ்வர்யா தத்தா, சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி, நடிகர் தீனா, வில்லன் நடிகர் விஜயன், பாடகி பின்னி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

மேலும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி வரும் வாரம் முதல் ஞாயிறு தோறும் பகல் 12.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும் அறிவித்துள்ளனர்.
அந்த ப்ரோமோ வீடியோ இதோ..
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri