டாப் குக்கு டூப் குக்கு வாகீசனின் அடுத்த அதிரடி.. போராட்டம் படத்தின் மூன்றாவது பாடல்
வாகீசன்
இலங்கையை சேர்ந்த தமிழ் ராப் பாடகர் வாகீசன். இவர் முருகனுக்காக பாடிய பாடல் உலகளவில் ஹிட்டானது. மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்த நிலையில், இவருடைய குரலில் அடுத்ததாக போராட்டம் திரைப்படத்திலிருந்து "வீரனே வா" என்கிற பாடல் வெளிவரவுள்ளது.
போராட்டம்
திரைப்படம் IBC தமிழ் ப்ரொடக்ஷன்ஸ் பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ் சிவராஜ் இயக்கி இருக்கும் படம் போராட்டம். ரீகன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க, பூவன் மதீசன் இசையமைக்கிறார்.
இப்படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளிவந்துள்ளன. முதலில் வெளியான வீர தமிழன் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இரண்டாவதாக வெளியான ரொமான்டிக் முட்ட கண்ணு பாடலும் ஹிட்டானது.

இந்நிலையில், போராட்டம் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் "வீரனே வா" வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர். பூவன் மதீசன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை வாகீசன் பாடியுள்ளார். வருகிற சனிக்கிழமை மாலை 7 மணிக்கு இந்த பாடல் வெளியாகும்.
மேலும், இந்த பாடல் வெளியீட்டு விழா சுவிட்சர்லாந்தில் பிரம்மாண்டமாக நடக்கிறது. இதற்கு முன் வெளிவந்த இரண்டு பாடல்கள் போலவே இந்த மூன்றாவது பாடலும் மாபெரும் அளவில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu