அச்சு அசல் பிச்சைக்காரனாகவே மாறிய பிரபல சீரியல் நடிகர்... வைரலாகும் போட்டோ, யாரு பாருங்க
சீரியல் நடிகர்
நடிகர்கள் நடிக்க வந்துவிட்டால் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் இறங்கி அடிக்க வேண்டும்.
அப்போது தான் அந்த கலைஞன் சிறந்த நடிகராக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க முடியும். இப்போது ஒரு பிரபல சீரியல் நடிகரின் வித்தியாசமான லுக் போட்டோ தான் வைரலாகி வருகிறது.
யார் அவர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலின் நடிகர் தான் ஒரு எபிசோடிற்காக பிச்சைக்காரனாக வேடம் போட்டுள்ளார்.
வேறுயாரும் இல்லை சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வெற்றி வசந்த் தான்.
இன்றைய எபிசோட்
கதையில் இப்போது விஜயா அண்ணாமலை ஏதாவது சரியான விஷயம் செய்து என்னை பெருமைப்படுத்து என கூறியதால் டாக்டர் பட்டம் வாங்க நிறைய விஷயங்கள் செய்கிறார்.
டாக்டர் பட்டம் வாங்குவதற்காக பொய்யாக நிறைய விஷயங்கள் விஜயா செய்ய அதனை முறியடிக்க முத்து ஒரு பிளான் போடுகிறார். பிச்சைக்காரனாக முத்து வேடம் போட்டு விஜயா முகத்திரையை கிழிக்கிறார்.
அந்த வீடியோவை பார்வதியின் தோழியிடம் முத்து காட்ட பின் விஜயா பிளான் மொத்தமாக முறியடிக்கப்படுகிறது.
சீரியல் கதைக்களத்தை தாண்டி முத்து அச்சு அசல் பிச்சைக்காரனாக வேடம் போட்ட போட்டோஸ் தான் இப்போது ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.