சிறுவயதில் இருந்தே பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்ட இந்த சீரியல் நடிகை யார் தெரிகிறதா?. பிரபல நாயகி தான்
சீரியல் நடிகை
தமிழ் சினிமா நாயகிகளுக்கு எப்படி இப்போதெல்லாம் வரவேற்பு கிடைக்கிறதோ அதைவிட பல மடங்கு சின்னத்திரை நாயகிகள் கொண்டாடப்படுகிறார்கள். சீரியல் நடிகைகள் எது செய்தாலும் உடனே பிரபலம் ஆகிவிடுகிறது.
தொடர்களில் நடிப்பது தாண்டி அவர்களுக்கு தான் அதிக போட்டோ ஷுட் வாய்ப்பு, தனியார் நிகழ்ச்சிகள், கடை திறப்பு என அதிக வாய்ப்புகள் குவிகின்றன.
ஆல்யா மானசா தொடங்க, பிக்பாஸ் புகழ் அர்ச்சனா என பலரும் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.
அப்படி இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் நடிகையும் மிகவும் பிரபலம் ஆனவர் தான்.
யார் இவர்
பரதநாட்டியம் மூலம் பலரையும் கவர்ந்த இவருக்கு சிறுவயதில் இருந்தே நாட்டியத்தின் மேல் பெரிய ஆசை இருந்திருப்பது புகைப்படம் மூலம் தெரிகிறது.
சமீபத்தில் முடிந்த அந்த சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போது கூட படப்பிடிப்பு தளத்தில் இருந்து நிறைய நடன வீடியோக்களை வெளியிடுவார்.
பரதநாட்டியம் மீது அதிக ஆர்வம் கொண்டவர் அண்மையில் நாட்டிய பள்ளியையும் தொடங்கியுள்ளார்.
இந்த விவரங்களை கண்டதும் யார் என்று கண்டுபிடித்திருப்பீர்கள். வேறு யாரும் இல்லை எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியா சிறுவயது போட்டோ தான் இது,

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
