சன் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல், வெளிவந்த அறிவிப்பு... எந்த சீரியல் தெரியுமா?
சன் டிவி
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.
இதில் ஒளிபரப்பாகும் கயல், சிங்கப்பெண்ணே, மருமகள், மூன்று முடிச்சு போன்ற தொடர்கள் எல்லாம் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில் சன் டிவியில் வெற்றிகரமாக ஓடும் ஒரு தொடர் முடிவுக்கு வரப்போகும் தகவல் தான் வந்துள்ளது.
எந்த தொடர்
சன் தொலைக்காட்சியில் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் மலர்.
கிட்டத்தட்ட 550 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த தொடரில் நிறைய நடிகர்கள் மாற்றமும் நடந்துள்ளது. முக்கியமாக கதாநாயகி மாற்றம் நடந்தது, தற்போது மலராக அஸ்வதி நடிக்க மக்கள் மனதையும் கவர்ந்துவிட்டார்.
தற்போது என்ன தகவல் என்றால் வெற்றிகரமாக ஓடும் இந்த தொடர் முடிவுக்கு வரப்போகிறதாம். ஆனால் எப்போது, கிளைமேக்ஸ் எப்படி இருக்கும் போன்ற விவரங்கள் தெரியவில்லை.