சன் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்- முழு விவரம் இதோ
சன் டிவி
சீரியல்களின் ராஜாவாக தமிழ் சினிமாவில் இருப்பது சன் டிவி தான்.
மற்ற தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த தொலைக்காட்சி அளவிற்கு அதிகம் வேறு எந்த தொலைக்காட்சியில் சீரியல்கள் இல்லை.
ஏகப்பட்ட தொடர்கள் உள்ளது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
அண்மையில் அன்பே வா, பிரியமான தோழி போன்ற முக்கிய தொடர்கள் முடிவுக்கு வந்தது, தற்போது நல்ல கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்த அருவி தொடரும் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
நேரம் மாற்றம்
சீரியல்கள் முடிவுக்கு வர புத்தம்புதிய தொடர்களும் ஒளிபரப்பாக தயாராக இருக்கிறது. இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஆனந்த ராகம் தொடரின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாம்.
இனி ஆனந்த ராகம் தொடர் 3 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.