இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை, இன்று தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகை! யார் என்று தெரிகிறதா
வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்கள் குழந்தையாக இருக்கும்போது எடுத்த புகைப்படம் அவ்வப்போது வெளிவரும். அந்த வகையில், இன்று தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
2002ல் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து, தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை தந்தார்.. முன்னணி நடிகையாக உயர்ந்து தனக்கென்று தனி இடத்தை உருவாக்கினார். ஒரு கட்டத்தில் இவருடைய மார்க்கெட் காலி என பலரும் விமர்சித்த நிலையில், 96, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் மூலம் கம்பேக் கொடுத்தார்.
திரிஷா
அவர் வேறு யாருமில்லை, 23 வருடங்களை கடந்து முன்னணி நடிகையாக நீடித்து நிலைத்து இருக்கும் திரிஷாதான். இவர் நடிப்பில் தற்போது கருப்பு, விஸ்வம்பரா ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டு அஜித்துடன் இவர் இணைந்து நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
சமீபத்தில், திரிஷாவுக்கு திருமணம் என தகவல் வெளிவந்தது. சண்டிகரை சேர்ந்த தொழிலதிபரை திரிஷா திருமணம் செய்யப்போவதாக கூறப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என திரிஷா வதந்திகளுக்கு பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.