முன்னணி ஹீரோக்களின் 50-வது படங்கள்.. வெற்றியா! தோல்வியா!
ஒரு நடிகர் அல்லது நடிகை 100 படங்களுக்கு மேல் நடித்தால் அது சாதனைக்குரிய விஷியமாக கருதப்படும். ஆனால் இந்த காலக்கட்டத்தில் 50 படங்களை கடந்து செல்வது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
அறிமுகமாகி 25 வருடம் கடந்த நிலையில் கூட சில நடிகர், நடிகைகள் 50 படங்களை கடக்க கஷ்டப்படுகிறார்கள். சிலர் சினிமா துறையில் இருந்து காணாமல் போகிறார்கள்.

சினிமா என்பது சிலருக்கு மட்டுமே வெற்றி பாதையாக அமைகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய கதாநாயகர்கள் 50-வது படம் அவர்களுக்கு எப்படி அமைந்தது என்பதை பற்றி காணலாம்.
முதலில் எம்ஜிஆர்
இன்று பல கமர்ஷியல் ஹீரோக்களுக்கு முன்னோடியாக இருந்தவர் எம்ஜிஆர். இவர் ப.நீலகண்டன் இயக்கத்தில் நல்லவன் வாழ்வான் என்ற படத்தில் 1961-ல் நடித்தார். சமூக கதை களம் கொண்ட இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியதாக சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த்
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவரது 50-வது படம் தெலுங்கில் வெளிவந்த டைகர் ஆகும். இந்த படம் நந்தமூரி ரமேஷ் இயக்கத்தில் 1979-ல் வெளிவந்தது. இந்த படம் எதிர்பாத்த வெற்றியை பெறாமல் தோல்வியை அடைந்தது.

கமல் ஹாசன்
எஸ்பிமுத்துராமன் இயக்கத்தில் 1976 -ல் வெளி வந்த படம் தான் மோகம் முப்பது வருஷம். இந்த படம் இவரின் 50-வது படமாகும். இந்த படம் கணவன் மனைவி இடையே வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்து காட்டும் படம். இந்த படம் வெற்றிகரமாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் விஜய். இன்று இவர் நடிப்பில் வெளி வரும் அனைத்து படங்களும் வெற்றி அடைந்து வரும் நிலையில். இவரது 50-வது படமான சுறா படம் படுதோல்வியை தழுவியது. இந்த படம் 2010-ல் எஸ்பி. ராஜ்குமார் இயக்கத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்
சினிமாவில் யாருடைய பின்பலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியில் நடிக்க வந்தவர் அஜித். இவர் நடித்து வெளி வந்த 50-வது படம் மங்காத்தா. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

விஜய் சேதுபதி
துணை நடிகராக சில படங்களில் நடித்து கதாநாயகனாக உயர்ந்தவர் விஜய் சேதுபதி. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளிவந்த 50-வது படம் தான் மகாராஜா. இந்த படம் பெரிய திருப்புமுனையாக விஜய் சேதுபதிக்கு அமைந்தது. இந்த படம் 100 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

தனுஷ்
தனது 50-வது படத்தை தானே இயக்கிய நடிகர் தனுஷ் மட்டும் தான். இவர் ராயன் என்ற படத்தை இயக்கியும், அதில் நடித்தும் உள்ளார். இந்த படம் கடந்த வாரம் ஜூலை 26ஆம் தேதி வெளிவந்த நிலையில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
