தமிழ் சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சூப்பர் தொகுப்பாளர்கள்- ஓர் பார்வை

Report

ஒரு நிகழ்ச்சி சிறந்து விளங்க வேண்டும் என்றால் அதற்கு முழு காரணம் நிகழ்ச்சி தொகுப்பாளர் தான். சுமாரான நிகழ்ச்சி கூட சூப்பரா மாற்றும் திறமை தொகுப்பாளரிடம் உள்ளது.

ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சி தொகுப்பது நிகழ்ச்சிக்கு மட்டும் அல்லாமல் தொகுப்பாளருக்கும் ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிறது.

இதில் பல தொகுப்பாளருக்கு சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்து அதில் பிரதிபலிக்க தொடங்குகின்றனர். இங்கு இப்போது சூப்பராக கலக்கிய டாப் 10 தொகுப்பாளர்கள் பற்றி காண உள்ளோம்.

தமிழ் சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சூப்பர் தொகுப்பாளர்கள்- ஓர் பார்வை | Top Television Anchors In Tamil Cinema

கோபிநாத்

"நீயா நானா" எனும் விவாத நிகழ்ச்சி பெருமளவு பேசக் காரணம் இவர்தான். தன்னுடைய வாதத்திறமையால் தனக்கென ரசிகர் கூட்டத்தை சேர்த்தவர். விஜய் தொலைக்காட்சியில் "மக்கள் யார் பக்கம்" எனும் அரசியல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

பல மேடைகளில் பேச்சு திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

தமிழ் சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சூப்பர் தொகுப்பாளர்கள்- ஓர் பார்வை | Top Television Anchors In Tamil Cinema

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா. இவர் ஜாலி, கேளிக்கையான ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர். இவரின் சிரிப்பை கிண்டல் பண்ண ஒரு வட்டாரம் உள்ளது. இவர் மா.கா.பா.ஆனந்துடன் இணைத்து தொகுக்கும் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சாதாரண நிகழ்ச்சி கூட சூப்பராக மாற்றுபவர் தொகுப்பாளினி பிரியங்கா.

தமிழ் சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சூப்பர் தொகுப்பாளர்கள்- ஓர் பார்வை | Top Television Anchors In Tamil Cinema

டிடி (திவ்யதர்ஷினி)

டிடி கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருக்கும் இவர் "காபி வித் டிடி" நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். விளையாட்டுத்தனமான பேச்சால் மக்களின் மனதில் நின்றவர்.

இவர் அதிகம் சம்பளம் வாங்கும் தொகுப்பாளினி என்று சொல்லப்படுகிறது.

தமிழ் சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சூப்பர் தொகுப்பாளர்கள்- ஓர் பார்வை | Top Television Anchors In Tamil Cinema

அர்ச்சனா

இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.பெண்கள் காமெடியாக நிகழ்ச்சி தொகுக்கும் ட்ரெண்டை கொண்டு வந்தார். இவர் தொகுப்பாளினியாக இருந்து தற்போது படத்தில் நடித்துள்ளார்.

மேலும் தன்னுடைய மகள் சாராவும் குட்டி தொகுப்பாளினியாக அறிமுகம் படுத்தியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சூப்பர் தொகுப்பாளர்கள்- ஓர் பார்வை | Top Television Anchors In Tamil Cinema

மா.கா.பா

முதலில் ரேடியோவில் பணியாற்றி பின் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னை அறிமுகம் செய்தவர் மா.கா.பா. விஜய் தொலைக்காட்சியில் அது,இது,எது நிகழ்ச்சி மூலம் நன்கு பிரபலமானவர்.

திரைப்படங்களில் நடித்து தற்போது பிரியங்காவுடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுத்து வருகிறார்.

தமிழ் சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சூப்பர் தொகுப்பாளர்கள்- ஓர் பார்வை | Top Television Anchors In Tamil Cinema

ரம்யா சுப்பிரமணியன்

தமிழ் திரை உலகத்தில் பிரபலமான தொகுப்பாளினி "விஜே ரம்யா". இவர் 10 ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். பிரபலமான நிகழ்ச்சியை தொகுத்ததன் மூலம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அவருக்கு.

தமிழ் சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சூப்பர் தொகுப்பாளர்கள்- ஓர் பார்வை | Top Television Anchors In Tamil Cinema

சிவகார்த்திகேயன்

நம்ம வீட்டு பிள்ளை என அறியப்படும் சிவகார்த்திகேயன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக வந்து பின் தொகுப்பாளராக வந்தார். இவர் அனைவரையும் தன்னுடைய நகைச்சுவை மூலம் கட்டி வைத்தார்.

தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

தமிழ் சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சூப்பர் தொகுப்பாளர்கள்- ஓர் பார்வை | Top Television Anchors In Tamil Cinema

லட்சுமி ராமகிருஷ்ணன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். பிரிந்த குடும்பங்களை சேர்த்து வைக்கும் நிகழ்ச்சி நடத்துவதில் பல குடும்பப் பெண் ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் ஒரு நடுவராக இருந்து குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் இவரின் பங்கு பெரிதளவு பேசப்படுகிறது.

தமிழ் சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சூப்பர் தொகுப்பாளர்கள்- ஓர் பார்வை | Top Television Anchors In Tamil Cinema

கிகி (கீர்த்தி சாந்தனு)

கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான "மானாட மயிலாட" நிகழ்ச்சி தொகுப்பது மூலம் அறிமுகமானவர் கீர்த்தி. நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் இருந்து பின் டான்ஸ் ஸ்டுடியோ என்ற நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

கலகலப்பான பேச்சால் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார்.

மணிமேகலை

சன் மியூசிக்கில் பல வருடங்களாக பணியாற்றி தற்போது விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சி தொகுத்து வருகிறார். "குக்கு வித் கோமாளி" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அனைவராலும் ரசிக்கப்பட்டார்.

தமிழ் சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சூப்பர் தொகுப்பாளர்கள்- ஓர் பார்வை | Top Television Anchors In Tamil Cinema

உடல் எடையை சுத்தமாக குறைத்தது எப்படி?- ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா கூறிய டிப்ஸ் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US