ஆடம்பர சொகுசு கார்கள் வைத்திருக்கும் சின்னத்திரை பிரபலங்கள்- யார் யார் பாருங்க
பிரபலங்கள்
வெள்ளித்திரை பிரபலங்களை விட தமிழக மக்களிடம் அதிகம் பிரபலமாக இருப்பது சின்னத்திரை பிரபலங்கள் தான். அன்றாடம் மக்களால் சீரியல்கள் மூலம் கொண்டாடப்படுகிறார்கள்.
ஒரு சீரியல் நடித்தாலே அவர்கள் பிரபலம் அடைந்துவிடுகிறார்கள். இதனால் சின்னத்திரை கலைஞர்கள் விளம்பரம் நடிப்பது, தனியார் நிகழ்ச்சிகளுக்கு செல்வது, போட்டோ ஷுட் என எப்போதுமே பிஸியாகவே உள்ளனர்.
இப்படி மக்களால் கொண்டாடப்பட்ட சின்னத்திரை பிரபலங்கள் நிறைய சொகுசு கார்களை வாங்கியுள்ளனர்.
அப்படி யார் யாரெல்லாம் ஆடம்பர கார்கள் வாங்கியுள்ளனர் என்பதை காண்போம்.
மணிமேகலை பிஎம்டபிள்யூ எக்ஸ் 1, ஆடி போன்ற சொகுசு கார்களை வைத்துள்ளனர். இந்த கார்கள் ரூ. 55 லட்சத்திற்கு இருக்குமாம்.
சரண்யா துரடி இவர் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 கார் வைத்துள்ளார், அதன் விலை ரூ. 78 லட்சத்திற்கும் அதிகமாம்.
ஷிவானி நாராயணன் சீரியல்கள், பிக்பாஸ் என பிரபலமான இவர் பிஎம்டபிள்யூ 7 சிரிஸ் கார் வைத்துள்ளார், விலை ரூ. 1.2 கோடி என கூறப்படுகிறது.
பிரதீப்பை Red Card கொடுத்து வெளியே அனுப்பிய பிக்பாஸ்- பெரிய வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி, என்ன விஷயம் தெரியுமா?
பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களால் அறியப்பட்ட இவர் பிஎம்டபிள்யூ 7 சிரிஸ் சொகுசு கார் வைத்துள்ளார், ரூ. 1 கோடிக்கு மேல் இருக்குமாம்.
சஞ்சீவ்-ஆல்யா மானசா இவர்கள் திருமணத்திற்கு பிறகு நிறைய கார்கள் வாங்கியுள்ளனர். பிஎம்டபிள்யூ சீரிஸில் இவர்கள் 3 கார் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சுனிதா குக் வித் கோமாளி மூலமாக பிரபலமான சுனிதா அண்மையில் சொகுசு கார் ஒன்று வாங்கினார், ரூ. 50 லட்சம் என்கின்றனர்.
ரச்சிதா சீரியல்கள், பிக்பாஸ் சீசன் 6 என பிரபலமான இவர் மோரிஸ் கரேஜ் என்ற புதிய கார் ஒன்றை வாங்கினார்.