நாளுக்கு நாள் அதிகரிக்கும் டூரிஸ்ட் பேமிலி வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
டூரிஸ்ட் பேமிலி
குட் நைட், லவ்வர் போன்ற தரமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்கள் மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாவது திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் இணைந்து நடித்து சமீபத்தில் இப்படம் வெளிவந்தது. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
சென்சிட்டிவான கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் முதல் நாளில் இருந்த விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல்
இந்த நிலையில், 14 நாட்களில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 59 கோடி வசூல் செய்துள்ளது.

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
