3 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா
டூரிஸ்ட் ஃபேமிலி
சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சசிகுமார். கடந்த ஆண்டுகளில் அயோத்தி, நந்தன் போன்ற தரமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.
அதை தொடர்ந்து தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி சிறந்த படைப்பை கொடுத்துள்ளார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தார். குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் மூலம் இந்த தயாரிப்பு நிறுவனம் ஹாட்ரிக் வெற்றியடைந்துள்ளது.
இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து முதல் முறையாக சிம்ரன் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல் போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த மே 1ம் தேதி வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல்
இந்த நிலையில், 3 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது.