டூரிஸ்ட் ஃபேமிலி 8 நாட்களில் உலகளவில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
டூரிஸ்ட் ஃபேமிலி
தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்களை கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக அயோத்தி, நந்தன், கருடன் ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்தது.
இதை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.
இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து சிம்ரன் முதல் முறையாக நடித்திருந்தார். மேலும் எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ரமேஷ் திலக் என பலரும் நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்துள்ள இப்படம் உலகளவில் 8 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 8 நாட்களில் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளது.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
