வசூல் வேட்டையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.. இதுவரை இத்தனை கோடியா
டூரிஸ்ட் ஃபேமிலி
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் - சிம்ரன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சென்ற வாரம் திரைக்கு வந்த இப்படத்தை மக்கள் தல மேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
குட் நைட் மற்றும் லவ்வர் படங்களை தொடர்ந்து மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஹாட்ரிக் வெற்றியாக டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அமைந்துள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.
வசூல் வேட்டை
முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் உலகளவில் 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 32 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது.