பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் டூரிஸ்ட் பேமிலி.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா..
டூரிஸ்ட் பேமிலி
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி.
இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு வந்தபின் என்ன நடக்கிறது என்பது குறித்து இப்படம் அழகாக பேசியிருந்தது. முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு.
சசிகுமார், சிம்ரன், எம்.எஸ். பாஸ்கர், கமலேஷ், ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல் என இப்படத்தில் நடித்திருந்த அனைவரும் நடிப்பில் பட்டையை கிளப்பி இருந்தனர்.
வசூல்
இந்த நிலையில், வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 65 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது.