டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர் அபிஷனுக்கு திருமணம் முடிந்தது... அழகிய ஜோடி போட்டோ இதோ
டூரிஸ்ட் பேமிலி
சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தனது முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்ததுடன் பாராட்டையும் பெற்றார். பட்டிதொட்டி எங்கும் கலக்கிய இப்படம் ரூ. 7 கோடி பட்ஜெட்டில் உருவாக ரூ. 90 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது.
திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட இப்படம் கடந்த ஜுன் மாதம் ஓடிடி தளத்திலும் வெளியாகிவிட்டது.

திருமணம்
டூரிஸ்ட் ஃபேதிமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மேடையில் தனது நீண்டநாள் காதலியான அகிலாவிடம் திருமணம் செய்ய சம்மதமா என கேள்வி எழுப்பினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இன்று இருவீட்டாரின் சம்மதத்துடன் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்-அகிலா திருமணம் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    