விஜய் மகன் படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட நடிகர்.. அட இது சூப்பர் அப்டேட்-ஆ இருக்கே
டூரிஸ்ட் ஃபேமிலி கமலேஷ்
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கும் திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்க சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்தில் சசிகுமாரின் மகனாக நடித்திருந்தவர் குழந்தை நட்சத்திர நடிகர் கமலேஷ். இப்படத்திற்கு பின் இவருக்கு ரசிகர்களிடையே தனி வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்தடுத்த படங்கள்
இந்த நிலையில், கமலேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதில் முதலில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிவரும் அவருடைய முதல் படத்தில் கமலேஷ் நடித்து வருகிறாராம். ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 திரைப்படத்திலும் இவர் நடித்து வருவதாக அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri