டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
டூரிஸ்ட் ஃபேமிலி
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவரும் திரைப்படங்கள் என்றாலே தரமான ஒன்றாக தான் இருக்கும் என மூன்றாவது முறையும் நிரூபித்துள்ளனர்.
குட் நைட் மற்றும் லவ்வர் என தொடர்ந்து இரண்டு தரமான ஹிட் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக வெளிவந்துள்ள படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி.
இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மனித நேயம் பற்றி பேசிய இப்படத்தை, திரையரங்கில் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வசூல் விவரம்
இந்த நிலையில், முதல் நாள் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் முதல் நாள் ரூ. 2.5 கோடி வசூல் செய்துள்ளது.

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
