சூர்யாவின் ரெட்ரோ உடன் மோதும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம்.. அறிவிப்பு இதோ
ரெட்ரோ
வருகிற மே 1 அன்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ரெட்ரோ திரைப்படம் வெளிவரவுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கண்டிப்பாக சூர்யாவின் கம் பேக் திரைப்படமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரெட்ரோ திரைப்படம் வெளிவரும் அதே போல் மற்றொரு எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமும் வெளிவரவுள்ளது.
டூரிஸ்ட் பேமிலி
சசி குமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டூரிஸ்ட் பேமிலி. ஏற்கனவே இப்படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்மூலம் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
இந்நிலையில், மே 1 டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளிவருவதாக அறிவித்துள்ளனர். கண்டிப்பாக ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் பேமிலி இரண்டு திரைப்படங்களும் தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றியை தேடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.