பல கோடி வசூலை அள்ளிய டூரிஸ்ட் பேமிலி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
டூரிஸ்ட் பேமிலி
2025ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது. மதகஜராஜா, குடும்பஸ்தன், குட் பேட் அக்லி, டிராகன் என தொடர்ந்து பல ஹிட் படங்கள் வெளிவந்தன. அந்த வரிசையில் தற்போது டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் இணைந்துள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சசிகுமார், சிம்ரன் இணைந்து நடித்திருந்தனர். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
இந்த ஆண்டின் தலைசிறந்த இந்திய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாக மாறியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் ராஜமௌலி என அனைவரும் இப்படத்தை பாராட்டி பேசியுள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் பாக்ஸ் ஆபிசில் உலகளவில் இதுவரை ரூ. 74 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் பிரிவுக்கு அந்த நபர் மட்டுமே காரணம்; இது திட்டமிட்ட சதி - அதிர்ச்சி கொடுத்த ஆர்த்தி IBC Tamilnadu
