மாபெரும் நஷ்டத்தை நோக்கி நகரும் டாக்சிக்.. இன்னும் 800 கோடி வேணுமா!!

By Karthick Raja Sep 04, 2026 03:30 AM GMT
Report

டாக்சிக் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்த விவரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 9 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது, இன்னும் எவ்வளவு வசூல் வந்தால் லாபத்தை எட்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவின் டாப் 5 நடிகைகள், முதலிடத்தில் யார் தெரியுமா? இதோ

இந்தியாவின் டாப் 5 நடிகைகள், முதலிடத்தில் யார் தெரியுமா? இதோ

டாக்சிக்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பான்-இந்தியா திரைப்படமாக உருவாகி கடந்த வாரம் டாக்சிக் வெளியானது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இப்படத்தை இயக்க, யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ருக்மிணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி என பான்-இந்தியன் ஸ்டார்ஸ் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மாபெரும் நஷ்டத்தை நோக்கி நகரும் டாக்சிக்.. இன்னும் 800 கோடி வேணுமா!! | Toxic Heading Towards A Massive Loss At Box Office

2026-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று டாக்சிக். கடந்த மார்ச் மாதமே இப்படம் வெளிவரவிருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆகஸ்ட் மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப்போனது.

மாபெரும் நஷ்டத்தை நோக்கி நகரும் டாக்சிக்.. இன்னும் 800 கோடி வேணுமா!! | Toxic Heading Towards A Massive Loss At Box Office

மேலும், டீசர், கிளிம்ப்ஸ் மற்றும் டிரைலர் என தொடர்ந்து இப்படம் குறித்து வெளியான விஷயங்கள் சர்ச்சையில் சிக்கின. இருப்பினும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால். அந்த எதிர்பார்ப்பை டாக்சிக் திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், 9 நாட்களை கடந்துள்ள டாக்சிக் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 350 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. ஆனால், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாக வேண்டும் என்றால் இன்னும் ரூ. 800 கோடி வசூல் செய்ய வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பு மிகமிக குறைவு. இதனால் டாக்சிக் திரைப்படம் வசூல் ரீதியாக படுதோல்வியை சந்தித்துள்ளது என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மாபெரும் நஷ்டத்தை நோக்கி நகரும் டாக்சிக்.. இன்னும் 800 கோடி வேணுமா!! | Toxic Heading Towards A Massive Loss At Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US