பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் டாக்சிக் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
யஷ் நடிப்பில் வெளிவந்த டாக்சிக் திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.
டாக்சிக்
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில், யஷ் நடிப்பில் உருவாகி கடந்த 26-ஆம் தேதி வெளியான திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று டாக்சிக். ஆனால் அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் கடுமையாக அடிவாங்கியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், 4 நாட்களை கடந்துள்ள டாக்சிக் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் ரூ. 240 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
