அட்வான்ஸ் புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் டாக்சிக்.. அடேங்கப்பா இத்தனை கோடியா
யாஷ் நடிப்பில் நாளை வெளிவரவிருக்கும் டாக்சிக் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
டாக்சிக்
கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் யாஷுடன் இணைந்து கியாரா அத்வானி, தாரா சுதாரியா, நயன்தாரா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். கே.ஜி.எப் படத்திற்கு இசையமைத்த ரவி பாசூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ப்ரோமோஷன் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் யாஷ் தனது படம் குறித்தும், முதலமைச்சர் விஜய் குறித்தும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அட்வான்ஸ் புக்கிங்
ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளியாகும்போதும் அந்த படத்தின் அட்வான்ஸ் புக்கிங் எவ்வளவு என்று பார்ப்பது வழக்கம் தான். அதை வைத்து இப்படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்பது தெரிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில், நாளை வெளியாகவுள்ள டாக்சிக் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில், இப்படம் அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே ரூ. 45 கோடி வரை வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக முதல் நாள் வசூல் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என் தெளிவாக தெரிகிறது.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri