டாக்சிக் படத்தில் நடிப்பதற்காக யாஷ் முதல் நயன்தாரா வரை பிரபலங்கள் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா?
டாக்சிக்
கன்னட திரையுலகில் இருந்து அடுத்த பிரம்மாண்ட படைப்பாக வெளிவரவிருக்கும் திரைப்படம் டாக்சிக். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் கீத்து மோகன்தாஸ் இயக்க, யாஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

மேலும் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுட்டரியா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படம் குறித்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டும் சர்ச்சையில் சிக்குகிறது.

இரண்டாம் திருமணம் செய்யும் மனோஜ்.. முத்துவிடம் சிக்கிக்கொண்டாரா? நாளை சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவிருப்பது இதுதான்
டீசரில் தொடங்கி நேற்று வெளிவந்த தபாஹி பாடல் வரை பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக இப்படத்திலிருந்து வெளிவந்த லேடீஸ் லேடீஸ் என்கிற டீசருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை என்று தான் தெரிகிறது.
சம்பளம்
இந்த நிலையில், டாக்சிக் திரைப்படத்தில் நடிப்பதற்காக பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் கதாநாயகன் யாஷ் ரூ. 50 கோடி மற்றும் லாபத்தில் பங்கு என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

மேலும், நடிகை கியாரா அத்வானிக்கு ரூ. 15 கோடி, நயன்தாராவிற்கு ரூ. 12 கோடி, ருக்மிணி வசந்துக்கு ரூ. 5 கோடி, ஹுமா குரேஷிக்கு ரூ. 3 கோடி மற்றும் நடிகை தாரா சுட்டரியாவிற்கு ரூ. 2 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் இயக்குநர் கீத்து மோகன்தாஸ் லாபத்தில் பங்கு என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவே டாக்சிக் திரைப்பட பிரபலங்களின் சம்பள விவரம் என தகவல் இணையத்தில் உலா வருகிறது.
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri