டாக்சிக் படத்தில் நடிக்கும் நடிகர் யாஷ், நடிகைகள் நயன்தாரா, ருக்மிணி, கியாரா அத்வானி சம்பள விவரம்.. எவ்வளவு தெரியுமா
டாக்சிக்
2026ஆம் ஆண்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று டாக்சிக். கேஜிஎப் நாயகன் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா, ருக்மிணி வசந்த, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து சர்ச்சையில் சிக்கியது. இதை தொடர்ந்து இப்படத்தின் நாயகிகளின் போஸ்டர்ஸ் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
சம்பள விவரம்
இந்நிலையில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடித்து வரும் நடிகர் யாஷ் மற்றும் நடிகை நயன்தாராவின் சம்பள விவரம் குறித்து ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இதில், யாஷ் ரூ. 50 கோடியும், நயன்தாரா ரூ. 18 கோடியும் சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது.

மேலும் தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிகை ருக்மிணி வசந்த் மற்றும் கியாரா அத்வானியின் சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க ருக்மிணி வசந்த் ரூ. 5 கோடியும், கியாரா அத்வானி ரூ. 5 கோடியும் சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.