Toy Story 5 திரை விமர்சனம்
Toy Story 5 திரை விமர்சனம்
ஹாலிவுட்டில் அனிமேஷன் படங்களுக்கு என பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர், ஏன் உலகளவில் கூட கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ் பேவரட் ஆன டாய் ஸ்டோரி சீரிஸ் 5வது பாகம் தற்போது வெளிவர, படம் எப்படி? பார்ப்போம்.

கதைக்களம்
டாய்ஸுகளின் ஓனர் போனி இவர் மட்டும் தான் இந்த டாய்ஸுகளை வைத்து விளையாடுகிறார். உலகமே டிஜிட்டல் மொபைல் நோக்கி நகர்ந்துவிட்டது. இதனால் போனிக்கு நண்பர்களே இல்லை. இதனால் எல்லோரும் விளையாடும் லில்லிபேட் ஒன்றை போனி அப்பா வாங்கி தருகிறார்.
அந்த லில்லிபேட் வந்ததில் இருந்து போனி தன் டாய்ஸுகளை கண்டுகொள்வதே இல்லை. போனி ஆன்லைனிலே பேசி சில நண்பர்களை பிடித்து அங்கு விளையாட செல்கிறார், இதை தடுக்க வேண்டும் என ஜெஸ்ஸி, புல்ஸ் ஐ டாய்ஸும் போனியுடன் செல்ல, போனியோ இந்த 2 டாய்ஸையும் காரிலே விட்டு செல்கிறார்.

பிறகு ஜெஸ்ஸி பிரிந்து வேறு இடத்திற்கு செல்ல, ஜெஸ்ஸி போனி-யை கண்டுப்பிடித்தாரா, தொலைந்த ஜெஸ்ஸியை வூடி கண்டுபிடித்தாரா? டிஜிட்டலிருந்து குழந்தைகள் மீண்டும் டாய்ஸுடன் விளையாட ஆரம்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
டாய் ஸ்டோரி என்றாலே வூடி தான் முதன்மை நாயகனாக இருந்து தன் டாய் ஓனரின் தேவைகாக எப்போதும் போராடும், ஒவ்வொரு பார்ட் வரும் போது ஒரு புதிய டாய் அறிமுகமாகும், ஆனால், இதில் ஜெஸ்ஸி தான் முதன்மை கதாபாத்திரம்.
அவரை சுற்றியே கதை பெரும்பாலும் நகர்கிறது, டாய்ஸ் அதிலிருந்து பேட்டரி டாய்ஸ் அதிலிருந்து டிவைஸ் டாய்ஸ் பிறகு லில்லிபேட் வரை டெக்னாலஜிஸ் வளர்ச்சியை ஒவ்வொரு பார்ட் ஆக காட்டிய விதம் சூப்பர்.

அதிலும் தற்போது உள்ள குழந்தைகள் மொபைல் போனில் எப்படி மூழ்கி, நிஜ வாழ்க்கையில் நண்பர்களை தொலைக்கிறார்கள் என்பதை ஒரு அனிமேஷன் படமாக எடுத்து குழந்தைகளிடம் எடுத்து சென்றதற்காகவே பாராட்டுக்கள்.
என்ன முந்தைய பாகத்தில் இருந்த காமெடி காட்சிகள், வசனங்கள் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங், ஆனாலும், எங்குமே நம்மை போர் அடிக்க வைக்கும்படி ஏதுமில்லை. டெக்னிக்கலாக பின்னணி இசை பிராமதம், அனிமேஷன் ஒர்க் சொல்லவா வேண்டும், சூப்பர்.
க்ளாப்ஸ்
கதைக்களம் டிஜிட்டல் வளர்ச்சி நிஜ உலகம் குழந்தைகள் மறப்பது குறித்து பேசிய விதம் எமோஷ்னல் காட்சிகள்
பல்ப்ஸ்
இன்னும் கொஞ்சம் காமெடி இருந்திருக்கலாம்.
மொத்ததில் டாய் ஸ்டோரி என்றாலே கண்களை மூடிக்கொண்டு குழந்தைகளுடன் செல்லலாம், இதுவும் அப்படியே.