சன் டிவி ரோஜா சீரியல் நடிகையின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்.. கண்கலங்கிய நடிகை..
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் TRPயில் உச்சத்தில் இருக்கும் சீரியல் ரோஜா.
இதில் முன்னணி கதாபாத்திரங்களாக ரோஜா, அர்ஜுன் என இரு கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை.
சமீபத்தில் நடிகை பிரியங்கா பேட்டி ஒன்றில் பங்கேற்று தனது அனுபவங்கள் குறித்து பல சுவரசயமான விஷயங்களை கூறினார். இந்நிலையில் இந்த பேட்டியில் தனது சிறு வயதில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியது : " என்னுடைய ஹேண்ட் பேக்கில் எப்போதும் பிஸ்கட் பாக்கெட் இருக்கும். யாரும் பசியால் இருப்பதை நான் விரும்ப மாட்டேன். ஏனென்றால் சிறுவயதில் நான் பல நாட்கள் சாப்பிடாமல் பசியுடன் இருந்துருகிறேன். சிறுவயதில் எனக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தது.
அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டு விட்டது. ஒரு நாள் வீட்டில் சாப்பாடு இருக்கும் ஒரு நாள் இருக்காது. நாங்கள் விறகு அடுப்பில் கூட சமைத்து சாப்பிட்டு இருக்கிறோம் " என்று கூறியுள்ளார்.