டிரெண்டிங் திரை விமர்சனம்
டிரெண்டிங்
கலையரசன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை தந்தவர்.
அவர் நடிப்பில் சிவராஜ் இயக்கத்தில் இன்றைய உலகில் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனையான சோசியல் மீடியா உலகம் குறித்து பேச வந்துள்ள ட்ரெண்டிங் படம் மக்கள் மனதை கவர்ந்தா? பார்ப்போம்.
கதைக்களம்
கலையரசன், ப்ரயாலயா இன்றைய ட்ரெண்டிங் கபுள். காலை முழித்து கால் கழுவி பல் விளக்குவது வரை ரீல்ஸ், இன்ஸ்டா, யூடியூப்-ல் அப்லோட் செய்து கபுள் வீடியோ செய்பவர்கள்.
திடிரென ஒரு நாள் இவர்கள் சேனல் டெலிட் ஆகிறது, இதனால் வாங்கிய வீட்டின் லோன் தலையில் இடியாக விழ, அந்த நேரத்தில் ஒரு ஆன்லைன் ரியாலிட்டி ஷோ என்று கால் வருகிறது. 7 நாட்கள் உங்கள் வீட்டிலேயே இருக்கலாம், நாங்கள் சொல்லும் டாஸ்கை 4 கட்டமாக முடித்தால் உங்களுக்கு 2 கோடி கிடைக்கும் என சொல்கின்றனர்.
பெரிய பணம் லோன் தலைவலி எல்லாம் முடிந்து விடும் என இருவரும் அந்த டாஸ்-கிற்குள் வர, அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
இயக்குனர் சிவராஜ் பிக்பாஸ்+ Squid Game இரண்டையும் கலந்து இன்றைய ரீல்ஸ் மோக கபுள்ஸ் தலையில் கட்டினால் என்ன ஆகும் என்ற கான்செப்ட் உடன் திரைக்கதை அமைத்துள்ளார்.
அதற்கு கலையரசனும், ப்ரயாலையும் அப்படியே பொருந்தி போகின்றனர். எதோ ஜாலியாக ஆரம்பித்த டாஸ்க் அடுத்த அடுத்த கட்டமாக ஒருவரை ஒருவர் எமோஷ்னல் டேமேஜ் செய்வது போல் காட்டி, சமூகத்தின் இணைய அடிமைகளை தோல் உரித்து காட்டியுள்ளனர்.
அதிலும் டாஸ்க் ஆக கலையரசன் தன் மாமனர்க்கு விபத்து என்று சொல்வது, ப்ரயாலையா கலையரசனை பேசி நம்ப வைத்து ரெட் பட்டனை அமுக்க வைக்கும் காட்சி யூடியூபில் கபுள்ஸ் வீடியோ போடுவோரின் மற்றொரு முகத்தை காட்டிய விதம் சிறப்பு.
படத்தின் வசனங்கள் பல இடத்தில் ரசிக்க வைக்கிறது, நமக்கு தேவை என்றால் அங்கு கடவுள் வராமல் அங்கு பேய் வந்தால் நாம் அந்த பேய்-யை தான் கொண்டாடுவோம் போன்ற வசனங்கள் நச்.
படத்தின் முதல் பாதி டாஸ்க், என்ன செய்வார்கள் என்ற பதட்டம் இருக்க, இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்திற்கு மேல் அட என்னப்பா இது என்ற மனநிலைக்கு கொண்டு செல்கிறது.
ஒருவரின் ஒருவர் உண்மை முகம் தெரிந்ததும், சண்டை பிரிவு என செல்ல, பிறகு புரிதல் வந்து ஒன்றிணைவது என செல்லும் இடத்தில் மீண்டும் கலையரசன் எடுக்கும் முட்டாள் தனம் மனிதர்களின் இயல்பு என்றாலும், அந்த இடம் கொஞ்சம் அலுப்பு தட்ட ஆரம்பிக்கிறது.
அதிலும் கிளைமேக்ஸில் வரும் டாஸ்க் எல்லாம் பணம் மனிதர்களை எந்த எல்லைக்கு கொண்டு செல்கிறது என்பதன் கருப்ப பக்கத்தை காட்டியுள்ளது.
ரீல்ஸ், வீடியோ லைக், சப்ஸ்கிரைப் மோகம், அதனால் கிடைக்கும் பெரிய பணம், திடிரென இதெல்லாம் இல்லை என்றால் அவர்களின் குணநலன் எப்படியெல்லாம் மாறும் என்பதை கண் முன் காட்டியுள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு ஒரு வீடு இரண்டே கதாபாத்திரம் என அதற்குள் தன்னால் முடிந்த பெஸ்ட்-யை தந்துள்ளார், சாம் சி எஸ் பின்னணி இசை பெரும் பலம்.
க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம் கலையரசன், ப்ராயலையா நடிப்பு. பின்னணி இசை, படத்தின் வசனம்.
பல்ப்ஸ்
2 பேரை சுற்றியே கதை நகர்வது ஒரே விஷயம் திரும்பி திரும்பி நடப்பது போன்ற உணர்வு. இரண்டாம் பாதி என்னாகும் என்ற பரபரப்பு தாண்டி, அட என்னப்பா இது என உணர்வு வந்து விடுகிறது.
மொத்தத்தில் இன்றைய இணைய உலக சீர்கேடுகளை அப்படியே படம் பிடித்ததற்காகவே சில குறைகள் இருந்தாலும் இந்த Trending-யை Like செய்யலாம்.