பிரபாஸ் படத்தில் தீபிகா படுகோன் இடத்தை பிடித்த திருப்தி டிம்ரி.. வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா
ஸ்பிரிட்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவிருக்கும் படம் ஸ்பிரிட். இப்படத்தில் முதன் முதலில் தீபிகா படுகோன் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், தீபிகா படுகோன் பல கண்டிஷன்கள் போடுவதால், அவருடைய ஒர்க்கிங் ஸ்டைல் தனக்கு பிடிக்கவில்லை என கூறி, தீபிகாவை படத்திலிருந்து இயக்குநர் சந்தீப் வங்கா நீக்கிவிட்டார். அவருக்கு பதிலாக அனிமல் பட நடிகை திருப்தி டிம்ரி கதாநாயகியாக தற்போது கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில், ஹீரோ - ஹீரோயின் இடையே நெருக்கமான மற்றும் Bold-ஆன காட்சிகள் இருக்கிறது. A Rated படம் என்பதால் தான் தீபிகாவிற்கு பதிலாக திருப்தி டிம்ரியை சந்தீப் வங்கா நடிக்க வைக்கிறார் என தகவல் பரவி வந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், இப்படத்தில் புதிதாக கமிட்டாகியுள்ள நடிகை திருப்தி டிம்ரி எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
திருப்தி டிம்ரி சம்பளம்
முன்னதாக இப்படத்தில் நடிக்கவிருந்த தீபிகா படுகோன் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக கமிட்டாகியுள்ள நடிகை திருப்தி டிம்ரி, இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
