இந்த முன்னணி நடிகரை திருமணம் செய்ய விரும்பினேன்.. வெளிப்படையாக கூறிய அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரி
நடிகை திரிப்தி டிம்ரி
மாம் என்ற திரில்லர் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் திரிப்தி டிம்ரி.
பாலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வரும் திரிப்தி கடந்த ஆண்டு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார்.
அனிமல் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பை பெற்ற திரிப்தி, விக்கி கவுசல் ஜோடியாக பேட் நியூஸ் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது, ராஜ்குமார் ராவுடன் இணைந்து விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் வெளிவர உள்ள நிலையில், நடிகை திரிப்தி பாலிவுட்டில் முதன் முதலில் அவருக்கு பிடித்த நடிகர் குறித்து பேசியுள்ளார்.
திரிப்திக்கு மிகவும் பிடித்த நடிகர்
அதில், “பாலிவுட்டில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது ஷாருக்கான் தான், எனக்கு 5 முதல் 6 வயது இருக்கும் போது நான் அவரை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று என் குடும்பத்தில் இருக்கும் அனைவரிடமும் சொன்னேன்” என்று திரிப்தி கூறியுள்ளார்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
