இனி எப்படி வாழ்வேன்.. மனமுடைந்து பதிவிட்ட நடிகை த்ரிஷா
த்ரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் மற்றும் சூர்யாவின் 45வது படம் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷா, மனமுடைந்து பதிவு ஒன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.
நடிகை த்ரிஷா தனது மகனாக Zorro என்ற நாய் குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். பாசமாக வளர்த்து வந்த Zorro திடீரென உயிரிழந்து விட்டதாக த்ரிஷா சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
12 ஆண்டுகளாக வளர்த்து வந்த தன்னுடைய Zorro உயிரிழந்ததால் சற்று மன வேதனையில் இருந்த த்ரிஷா தற்போது, அவரது செல்லப் பிராணி இறந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் இருப்பதை அவரது இன்ஸ்டா பக்கத்தின் வழியாக தெரிவித்துள்ளார்.
மனமுடைந்து பதிவு
அதில், " நீ இல்லாமல் நான் எப்படி வாழ வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுக்காமல் சென்றுவிட்டாய்" என்று அவருடைய மன வருத்தத்தை தெரிவித்துள்ளார்.