திருமணம் பற்றி வைரலான செய்தி, ஹனிமூன் பற்றி நடிகை த்ரிஷா போட்ட பதிவு... செம ஸ்டோரி
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றும் கனவுக் கன்னியாக வாழ்பவர் நடிகை த்ரிஷா.
42 வயதிலும் அழகு மற்றும் Fitnessஸில் இளம் நாயகிகளுக்கு சவால் விடுகிறார். தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷா திருமணம் எப்போது என கேட்காத ரசிகர்களே இல்லை.
மௌனம் பேசியதே படத்தின் மூலம் மக்களால் கவனிக்கப்படும் நாயகியாக வலம் வர பெரிய ரீச் கொடுத்தது விக்ரமின் சாமி படம் தான். பின் லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஜி, ஆறு, உனக்கும் எனக்கும், கிரீடம் போன்ற பல படங்களில் நடித்தார்.
இடையில் சில வருடங்கள் த்ரிஷா மார்க்கெட் சரிய பொன்னியின் செல்வன் படம் அவருக்கு ஏறு முகத்தை கொடுத்துள்ளது. தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு ஆகி படங்களில் நடித்துள்ளார்.

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
திருமணம்
கடந்த சில நாட்களாக நடிகை த்ரிஷா பஞ்சாப் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வேகமாக பரவின. இதுகுறித்து நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், எனது வாழ்க்கை பற்றி மற்றவர்கள் முடிவு செய்வதை விரும்புகிறேன்.
எனது ஹனிமூனையும் அவர்களே பிளான் செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என தக்க பதிலடி பதிவு போட்டுள்ளார்.